தமிழ் , கன்னடம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

தற்போது கொரோனாவால் ஊரடங்கு நிலை பிரகடனப்படுத்திய நிலையில் கர்நாடக சுகாதார துறை அதிகாரிகள் அவரை வீட்டில் தனிமை படுத்தி இருப்பதாக செய்திகள் பரவியது.

இந்த செய்தி உண்மை இல்லை என ஷ்ரத்தா ஸ்ரீநாத் ட்விட்டரில் கூறியுள்ளார். “நான் மார்ச் 12 முதல் 15ம் தேதி வரை சென்னை மற்றும் ஐதராபாத்திற்கு சென்றுவந்தேன். அந்த விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.”

“கர்நாடக மருத்துவ துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுவதும் உண்மையில்லை. அவர்கள் வரவே இல்லை, என்னை தனிமையில் இருக்க சொல்லவில்லை.”

“நான் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை தேர்ந்தெடுத்தேன். மருத்துவராக உள்ள என் உறவினர் அளித்த அறிவுரையின்படி தான் முன் எச்சரிக்கை நடவைடிக்கையாக நானே என்னை தனிமை படுத்திக்கொண்டேன். ஒரு பொறுப்பான குடிமகனாக நான் அதை செய்தேன்” என கோரியுள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.