டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம், கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய சோனியாகாந்தி, பாஜகவின் முறைகேடுகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில், காங்கிரஸ் உறுப்பினர்கள் உரக்க குரல் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:-
நாட்டில் ஆட்சியை பிடிக்க பாஜக அரசு முறைகேடுகளை செய்து வருகிறது. இதுகுறித்து, பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் உரக்க வலியுறுத்தவேண்டும்.
பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மக்களவையில் நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தர்’ என்று குறிப்பிட்டுள்ளார்: இந்த விவகாரத்தில் சொல்ல வேண்டிய அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இருந்தாலும் நமது கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் பாஜகவின் நடவடிக்கை எதிராக உரக்க பேச வேண்டும் என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி வெட்கமில்லாத முயற்சிகளை மேற்கொண்டது என்று குற்றம் சாட்டியவர், பாஜகவின் முறைகேடுகளை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும், .மத்தியஅரசு நாட்டில் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை (பி.எஸ்.யூ) நரேந்திர மோடியின் அரசு நண்பர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும், வாட்ஸ்அப் தனியுரிமை மீறல் விவகாரத்தில், நரேந்திர மோடி அரசு அடிப்படை உரிமைகளை பறித்துள்ளது என்றும் கடுமையாக சாடினார்.
ஜம்மு-காஷ்மீரில் தேசிய தலைவர்களை அனுமதிக்காத பாஜக, ஐரோப்பிய தலைவர்களை அனுமதிக்கிறது என்று கூறியவர், காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவின் முறைகேடுகளை நாடாளுத்தில் உரக்க கூற வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார்.