டெல்லி: மாநில அரசின் மசோதா அரசியலமைப்பு விதிகளை மீறும் வகையில் இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா..? என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி ழுழுப்பி உள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு எதிராக குடியரசு தலைவர் மூலம் கேள்வி எழுப்பிய தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரித்து வருகிறது. நேற்று 5வது நாளாக விசாரணை நடைபெற்றது.

அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் அரசியல் சாசன பிரிவு 32 மற்றும் 226 ஆகியவற்றை ஆளுநர், குடியரசு தலைவர் முடிவுகள் குறித்து வழக்கு தொடுக்க மாநில அரசோ அல்லது தனி நபரோ பயன்படுத்த முடியாது என தெரிவித்தார்.
”அரசியல் சாசனம் 200ல் இருக்கக்கூடிய மூன்று வழிமுறைகள் தான் ஆளுநருக்கு மசோதா மீது முடிவெடுக்க வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்கலாம் அல்லது மசோதாவை சட்டமன்றத்திற்கு திரும்ப அனுப்பலாம் அல்லது மசோதாவை குடியரசுத் தலைவர் முடிவுக்காக அனுப்பி வைக்கலாம் இந்த மூன்று முடிவுகளை தவிர வேறு முடிவுகள் எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சிங்வி, சட்டமன்றத்தால் மறு நிறைவேற்றம் செய்து அனுப்பப்படக்கூடிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும் ஏனெனில் அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனம் வகுத்துள்ள வழிமுறை. அரசியல் சாசனம் வழங்கி இருக்கக்கூடிய அதிகாரத்தின் அடிப்படையில் மட்டுமே அதன் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஆளுநர் செயல்பட முடியும். ஆளுநரை பொறுத்த வரைக்கும் அமைச்சரவையின் ஆலோசனையின் படியும், உதவியின்படியும் தான் செயல்பட வேண்டும். மத்திய அரசின் வாதங்கள் அனைத்தும், ஆளுநரை மாநில முலமைச்சருக்கு மேலானவர் என்று கட்டமைக்கும் வகையிலேயே இருந்தது என்றனர்.
அப்பொது குறுக்கிட்ட நீதிபதி நரசிம்மா, ”ஒருவேளை மசோதா அரசியலமைப்பு விதிகளை மீறும் வகையில் இருந்தாலும், அமைச்சரவை ஒப்புதல் அளிக்க ஆளுநரை வலியுறுத்தும் போது, அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா?” என்று வினவினார்.
இதற்கு பதில் கூறிய மாநில அரசின் வழக்கறிஞர் சிங்வி, ”அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும், ஏனெனில் அரசியலமைப்பு திட்டம் மாறாது. அதேவேளையில், சட்டம் தவறாக இருந்தால் அதனை நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்று ரத்து செய்யப்படும், ஆளுநரை பொறுத்தவரை அவர் நீதிபதி அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
அரசியல் சாசன பிரிவு 200 படி ஆளுநருக்கு 4 வது வாய்ப்பு என்று ஒன்று இல்லை. காலவரம்பு இல்லாமல் மசோதாவை நிறுத்திவைக்க முடியாது, கிடப்பில் போட முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த இருபதுக்கு மேலான மசோதாக்கள் நான்கு ஆண்டுகள் வரை நிறுத்திவைக்கப்பட்டதுஇன்றும் 3 ஆண்டுகள் வரை மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. 2 ஆண்டுகள் ஆளுநர் நிறுத்தி வைத்தார். பின்னர் ஓராண்டுக்கு மேல் குடியரசு தலைவர் முன்பு கிடப்பில் உள்ளது” என்று பதிலளித்தனர்.
தொடர்ந்து வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசியலமைப்பை மீறும் ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது, ஏனெனில் இது அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான அவர்களின் கடமையை மீறுவதாகும். அரசியலமைப்பு ஆளுநருக்கு சில விருப்புரிமை அதிகாரங்களை வழங்கினாலும், இந்த விருப்புரிமை அரசியலமைப்பு ரீதியாக வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் அரசியலமைப்பு வரம்புகளுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது, அதாவது அரசியலமைப்பை மீறும் ஒரு மசோதாவை சட்டமாக மாற்ற ஆளுநர் அனுமதிக்கக்கூடாது.
ஆளுநரின் அரசியலமைப்பு கடமை:
அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்படுவதே ஆளுநரின் முதன்மைப் பணியாகும், இதில் மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புக் கோட்பாடுகளை மீறாமல் இருப்பதை உறுதி செய்வதும் அடங்கும்.
வரையறுக்கப்பட்ட விருப்புரிமை:
இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஆளுநருக்கு விருப்புரிமை அதிகாரங்கள் உள்ளன, ஆனால் இவை முழுமையானவை அல்ல, அரசியலமைப்பு கடமைகளின் கட்டமைப்பிற்குள் பயன்படுத்தப்பட வேண்டும், அரசியலமைப்புக்கு முரணான செயல்களை ஆதரிக்கக்கூடாது.
நீதித்துறை விளக்கம்
அரசியலமைப்பை மீறும் ஒரு மசோதாவை ஆளுநரால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது; ஆளுநர் ஒரு மசோதா சட்டவிரோதமானது என்று கருதினால், அரசியலமைப்பு விதிகளின்படி செயல்பட அவர்களுக்கு பொறுப்பு உள்ளது.
அரசியலமைப்பை அங்கீகரிக்க அதிகாரம் இல்லை:
ஆளுநர் அவர்கள் நம்பும் அல்லது உச்ச நீதிமன்றம் பின்னர் சட்டவிரோதமானது என்று தீர்மானிக்கும் ஒரு மசோதாவிற்கு வெறுமனே தங்கள் ஒப்புதலை வழங்க முடியாது. அவ்வாறு செய்வது அவர்களின் முக்கிய அரசியலமைப்பு கடமைகளுக்கு முரணானது.
பரிசீலனைக்கு பரிந்துரை:
ஒரு மசோதா அரசியலமைப்புக்கு முரணானது என்று கருதப்பட்டால் அல்லது உயர் அதிகாரியின் மறுஆய்வு தேவைப்பட்டால், ஆளுநர் மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு ஒதுக்கலாம்.
ஒப்புதல் மறுப்பு:
மசோதா அரசியலமைப்பை மீறுவதாக ஆளுநர் நம்பும் சந்தர்ப்பங்களில், அது சட்டமாக மாற அனுமதிப்பதற்குப் பதிலாக, ஒப்புதலை மறுப்பது அல்லது அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்புவது பொருத்தமான நடவடிக்கையாகும்.