ஜல்லிக்கட்டை தடை செய்தால் பிரியாணியையும் தடை செய்ய வேண்டும் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடந்த பத்திரிகை மாநாடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிநார் நடிகர் கமலஹாசன், பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
“ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை கிடையாது. அது ஏறுதழுவுதல் என்ற வார்த்தையில் இருந்து உருவானது. ஸ்பெயின் நாட்டில் காளைகளை வைத்து சண்டை நடத்துகிறார்கள். இதற்காக டிக்கெட் கொடுத்து பணம் வசூலிக்கிறார்கள். இதுபோன்ற காட்சி தினமும் நடந்து வருகிறது.
ஆனால், தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது தவறு. ஸ்பெயின் நாட்டில் காளையை சித்திரவதை செய்கின்றனர். பிறகு அந்த காளையை கொன்றுவிடுகிறார்கள்.
ஆனால் இங்கு அப்படி அல்ல. ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு. அவ்வளவுதான். தமிழகத்தில் காளையை தெய்வமாக வணங்குகிறார்கள்.
ஜல்லிகட்டை தடை செய்தால் முதலில் பிரியாணியை தடை செய்யவேண்டும்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.