நியூயார்க் :

 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள அமெரிக்காவில் வீட்டு உபயோக பொருட்களை வாங்க பல்வேறு நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்.

வீட்டிற்கு தேவையான கை துடைக்கும் காகிதம் முதல், (அங்கு நம்மைப்போல் தண்ணீர் உபயோகிப்பதை விட அனைத்திற்கும் காகிதத்தை உபயோக படுத்தும் பழக்கம் தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்), குடிநீர் பாட்டில்கள், கிருமி நாசினி என்று சகலத்தையும் வாங்கி குவிக்க மக்கள் கூடினர்.

கிழக்கே நியூயார்க் முதல் மேற்க்கே கலிபோர்னியா வரை பறந்து விரிந்த அமெரிக்க நாட்டில், இந்த இடம் இந்த கடை என்று இல்லாமல், அனைத்து இடங்களிலும் இதே நிலைமை தொடர்ந்தது.

வால்மார்ட், காஸ்ட்கோ, வெக்மான்’ஸ், க்ரோகேர், பப்லிக்ஸ் என அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும் பொருட்கள் வேகமாக விற்று தீர, அனைத்து கடைகளிலும், இந்த இந்த பொருட்டுகள் ஒரு நபருக்கு ஒரு குடும்பத்திற்கு இத்தனை தான் தரமுடியும் என்று கட்டுப்பாடுகள் விதித்து விற்பனை செய்து வருகின்றன.

தங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கப்பெறாதவர்கள், கடை கடையாய் ஏறியும் வாங்கி வருகின்றனர்.

பல்வேறு வணிக நிறுவனங்கள், தங்கள் கடைகளில் தேவையான சரக்குகள் உள்ளது யாரும் பீதியடைய வேண்டாம், என்று அறிவிப்புகளை வெளியிட்டபோதும், மக்கள் நிம்மதி அடைந்தவர்களாக தெரியவில்லை.