ஈரான்:

ரானில் கொரோனா வைரஸ் தக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611-ஆக அதிகரித்துள்ளதாக ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. 125 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பால் இது வரை 5,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,000 பேருக்கு மேல் உள்ளது. இந்தியாவிலும் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதுகுறித்து சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 12 ஆயிரத்து 729 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் அமைச்சர்கள் உள்பட சில முக்கிய பிரமுகர்கள் கொரோனா வைரசால் பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், பல அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது, பொது மக்களிடையே அச்சத்த ஏற்படுத்தியுள்ளது.