வாரணாசி

ளும் பாஜகவுக்கு எதிரான வாசகங்கள் உள்ள அட்டைகளை கடைகளில் வைத்து வாரணாசி வணிகர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஏழு கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. இதில் ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. உத்திரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் இறுதிக்கட்டமான மே 19 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தொகுதி பிரதமர் மோடியின் தொகுதி என்பதால் அரசியல் ஆர்வலர்கள் இங்கு நடப்பதை கூர்மையாக கவனித்து வருகின்றனர். அதுவும் சென்ற முறை  பாஜக கணிசமான தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பெற்றதால் தற்போதைய தேர்தல் மிகவும் கவனிக்கப்படுகிறது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற நடவடிக்கைகளால் வணிகர்கள் இடையே பாஜக மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. அது மோடியின் தொகுதியான வாரணாசியில் நன்கு எதிரொலித்து வருகிறது. இங்குள்ள வணிகர்கள் தங்கள் எதிர்ப்பை புது விதமாக காட்டி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கடைகளில் இந்தியில் “எக் ஹி பூல் – கமல் கி ஃபூல்” என எழுதிய அட்டைகளை வைத்துள்ளனர். இதற்கு  பொருள்  “நாங்கள் செய்த ஒரே தவறு தாமரை (பாஜக)வுக்கு வாக்களித்தது” என்பது  ஆகும்

அது மட்டுமின்றி இந்த வாசகங்களின் கீழ், “மோடிஜி, ஒரு உதவி செய்யுங்கள். முதலில் எங்கள் உணவுக்கு வழி செய்யுங்கள் அதன் பிறகு எங்களை வேலை அற்றவராக மாற்றுங்கள்” என எழுதப்பட்டுள்ளது.

https://twitter.com/scribe_prashant/status/1120896796270764033?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1120896796270764033&ref_url=https%3A%2F%2Fnewscentral24x7.com%2Fvaranasi-shopkeepers-anti-bjp-posters-narendra-modi-lok-sabha-elections-2019%2F

 

இந்த படங்கள் டிவிட்டரில்  பதியப்பட்டு வைரலாகி வருகிறது.