டெல்லி

ங்கிக்கணக்குகளை வாடகைக்கு விடலாம் என ஆசை காட்டி ஒரு கும்பல் மோசடி செய்வதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏராளமான படங்களில் ஒரே பாடலில் கதாநாயகன்/நாயகி மிகப்பெரிய செல்வந்தராகி வாழ்க்கையில் முன்னேறுவதாக காட்டுவது வழக்கமாக உள்ளது.  இதைக் காணும் பலரும் தாங்களும் இதைப் போல குறுகிய காலத்தில்  பண்க்காரனாக ஆசைப்பட்டு தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்கின்றனர்.

இவ்வாறு எளிதில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை குறி வைத்து, சமூகவலைதளங்களில் சமீபகாலமாக அதிகளவில் விளம்பரங்கள் வருகின்றன. அவற்றில், வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி மற்றும் விளம்பரங்கள் மூலம், ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வருவதும் ஒன்றாகும்.

இவ்வாறு வங்கிக் கணக்கை வாடகை விட்டால், ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.1,000 கமிஷன் கிடைப்பதாக கூறப்படுவதால்பணத்திற்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாத நபர்களிடம் வங்கி கணக்கை வாடகைக்கு விடுவதால், சம்மந்தப்பட்ட நபர்  பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த வங்கிக் கணக்குகளை வாடைக்கு எடுத்து அதன் மூலம் அவர்கள் செய்யும் அனைத்து சட விரோத செயல்களுக்கும் கணக்கு வைத்தவரே பொறுப்பாவார் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த மோசடியில்வெளிநாடுகளை சேர்ந்த மோசடி கும்பல், இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களை குறி வைத்து ஈடுபட்டு வருவது தெரிய் வந்துள்ளது.

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, வங்கி கணக்கை வாடகைக்கு விடுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் வங்கி கணக்கை வாடகை விடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரித்த அவர், வங்கி கணக்குகளை யாரிடமும் வழங்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.