டில்லி,
நாடு முழுவதும் 37 சதவீதம் பள்ளிகளில் மின்சார வசதி இல்லை என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

கல்விக்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் அரசு, 37 சதவிகிதம் பள்ளிகளில் மின்சாரமே இல்லை என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.  மனிதவள மேம்பாட்டுத்துறையின் மத்திய இணை அமைச்சர் உபேந்திர குஸ்வாஹா மாநிலங்களவையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர், 2017ஆம் ஆண்டு மார்ச் மாத புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 62.81 சதவீத பள்ளிக்கூடங்கள் மட்டுமே மின்சார வசதி பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

இதில் சண்டிகர், தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் – டையூ, புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத பள்ளிகள் மின்சார வசதி பெற்று இருப்பதாகவும்,  மின்சார வசதி இல்லாத அதிக பள்ளிகளைப் பெற்ற மாநிலங்களில், மணிப்பூர் முதல் இடத்திலும், பீகார் இரண்டாவது இடத்திலும், ஒடிசா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மத்திய அரசு இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.