டில்லி

த்திய சிவில் விமானத்துறை இயக்குநரகம் நடத்திய விபத்து குறித்த விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபகாலமாக விமானங்கள் சிறு சிறு விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது.  குறிப்பாகத் தரையிறங்கும் போது வால் பகுதி அடிபடுவது,  ரன்வேயில் இறங்கும் போது மோதுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.   குறிப்பாகக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடக்கும் இந்த விபத்துக்கள் சென்ற மாதம் 11 ஆக அதிகரித்துள்ளது.

இதையொட்டி மத்திய சிவில் விமானத்துறை இயக்குநரகம் ஒரு விசாரணையை நடாத்ஹ்டி உள்ளது.  அந்த விசாரணையில் விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.  இதில் ஒரு பகுதியாக விமான செயல்பாடு பொறுப்பாளர் மற்றும் விமானிகள் பயிற்சி மையம்  ஆகியவற்றுக்கு நோட்டிஸ் அனுப்பி விபத்துகளுக்கான காரணம் குறித்துக் கேட்டறிந்தது.

அதன் மூலம் விமான நிறுவனங்களில் பல பாதுகாப்பு விதிகளைச் சரியாக கடைப்பிடிப்பதில்லை என்னும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.  இது குறித்து இயக்குநரக தலைவர் அருண் குமார், “பல விமான நிறுவனங்கள் பாதுகாப்பு விதிகளைச் சரியாக கடைப் பிடிக்காதது அதிர்ச்சியாக உள்ளது.  இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்

இவ்வாறு பாதுகாப்பு விதிகளைச் சரியாக கடைபிடிக்காத நிறுவனங்களுக்குக் காரணம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.  அத்துடன் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தவும் தேவைப்பட்டால் அவர்களுக்குத் தண்டனை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மற்றொரு அதிகாரி, “கடந்த சில நாட்களாகவே பாதுகாப்பு பொறுத்தவரை நாங்கள் எந்த ஒரு அலட்சியத்தையும் பொறுக்க மாட்டோம் என கூறி வருகிறோம்.  இவ்வாறு கவனக்குறைவாக இருந்த 60 விமானிகளின் உரிமத்தை சில காலம் தற்காலிக ரத்து செய்துள்ளோம்.   இது நாங்கள் கடுமையாக இருப்பதாகப் பொருள் இல்லை.  ஆனால் நாங்கள் சரியான தீர்வு காண முயல்கிறோம்.  இதனால் ஒரு சில நேரங்களில் நாங்கள் தண்டனையில் அளவை பிறகு குறைத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.