மும்பை

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிவசேனா 25 ஆண்டுகளை வீணடித்து விட்டதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

நேற்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆளும் சிவசேனா கட்சியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர், மாநாட்டில் கலந்து கொண்ட மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தமது சிறப்புரையில் பாஜக மீது கடும் தாக்குதல் நடத்தினார்.

முதல்வர் உத்தவ் தாக்கரே, ”பாஜகவில் தாவுத் இப்ராகிம் பாரதிய ஜனதாவில் இணைவதாகச் சொன்னால் கூட ஏற்றுக் கொண்டு தேர்தலில் நிற்கச் சீட்டுக் கொடுத்து அமைச்சர் ஆக்கிவிடுவார்கள். நாட்டின் நிலைமை அந்த அளவுக்கு மிக ஆபத்தாக இருக்கிறது.

பாஜகவில் யாரும் இப்போது ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசுவது இல்லை. சிவசேனா கட்சியான நாம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம்.

பாஜக ஒரு போலி இ ந்துத்துவா கட்சி,  அது நாட்டை நரகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது. மத்திய அமைப்புகளைப் பயன்படுத்திப்  பொய் வழக்குகளைப் பதிந்து மராட்டிய மக்களைத் தொந்தரவு செய்தால் அமைதி காக்க மாட்டோம், என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.