மீண்டும் கடற்கரையில் சிவாஜி சிலை! அரசுக்கு செல்வமணி, சீமான் கோரிக்கை!

சென்னை:

சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் சென்னை கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என அரசுக்கு செல்வமணி,சீமான் கோரிக்கை உள்பட திரையுலகினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னையில் பெப்சி சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளனர். அப்போது, நடிகர் சிவாஜி சிலையை மெரினாவில் ஏதாவது ஒரிடத்தில் மீண்டும் தமிழக அரசு வைக்க வேண்டும் என சென்னையில் சீமான், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

சிவாஜி சிலை அருகே எத்தனை விபத்துகள் நடந்தது என்ற புள்ளி விவரம் யாரிடமும் இல்லை என்றும் கண்ணகி சிலையை எடுக்க என்ன காரணமோ, அதே காரணம்தான் சிவாஜி சிலை அகற்றப்பட்டதிலும் உள்ளது என்றும் சீமான் கூறியுள்ளார்.

சிறந்த பொக்கிஷமான சிவாஜிக்கு சிலைமையத்து நாம் மரியாதை செய்ய வேண்டும்.

மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு சிலையமைக்க வேண்டும் என்று அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

இன்னொரு சிவாஜி நமக்கு கிடைக்கமாட்டார் என்றும், சிவாஜி சிலை அமைக்க தமிழ் திரையுலகம் போராட வேண்டும் என்றும் ஆர்.வி.உதயகுமார் கூறியுள்ளார்.

 
English Summary
Shivaji statue on the beach again! r.k.Selvamani, Seeman Request for Government