மஹாராஷ்டிரா:
பெரும்பான்மையை நிரூபிக்க‌க் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 39 பேர் போர்க்கொடி உயர்த்தினர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை தாங்கிய ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்திக்கு அழைத்துச் சென்று தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கோரிக்கை குறித்து தன்னை நேரில் சந்தித்து தெரிவித்தால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெரும்பான்மை இல்லாத‌தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக வலியுறுத்தி உள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க‌க் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.