மும்பை: ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என சிவசேனா கட்சியின் பெண் வேட்பாளர் ஷைனா என்.சி.யை விமர்சித்த விவகாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தனருது பேச்சுக்கு உத்தவ் சிவசேனா எம்.பி சாவந்த்.. மன்னிப்பு கோரியுள்ளார்.
மும்பாதேவி தொகுதியில் போட்டியிட முன்னாள் பாஜக எம்எல்ஏ, ஷைனா என்.சிக்கு சிவசேனா கட்சியின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு வழங்கினார். இந்த தொகுதி ஏற்கனவே மும்பாதேவி தொகுதியில், மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த அமீன் படேலுக்கு எதிராக ஷைனா என்சி களமிறக்கப்பட்டு உள்ளார். இதனால், அங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இதை, உத்தவ் கட்சி எம்.பி.யான ஆனந்த் சாவந்த், கடுமையாக விமர்சனம் செய்தார். ஷைனா என்சி ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பொருள் (உருப்படி) என விமர்சித்தார். அவரது பேச்சுக்கு மாநிலத்தில் உள்ள பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இது, உத்தவ் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், வாக்கு வங்கி பாதிக்கப்படும் சூழல் எழுந்தது. சாவந்தின் கருத்துக்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. இதற்கு மகாயுதி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், உத்தவ் சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் தனது பேச்சுக்காக இன்று மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் சாவந்த், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இருந்தும் ஒரு பெண்ணை அவமதித்து விட்டேன். என் வாழ்நாளில் இப்படிச் செய்ததில்லை.
நான் அவரை, ஆபாச அர்த்தத்தில் பேசவில்லை. எனினும், நான் அந்த அர்த்தத்தில் பேசியதாக பலரும் என்னை குறிவைக்கிறார்கள். எனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.