மும்பை :

கொரோனா காரணமாக பிறக்கப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் கோயில்களும் மூடப்பட்டன.

மகாராஷ்டிர, மாநிலத்தில் இன்று முதல் (திங்கள் கிழமை) ஆலயங்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களை திறக்க அந்த மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலும், சுமார் எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று திறக்கப்படுகிறது. டோக்கன் பெற்றே தரிசனம் செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வெளியூர்காரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பாஸ் பெற்றுக்கொள்ளலாம். உள்ளூர் வாசிகள் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஷீரடி சாய்பாபா கோயிலில் 10 வயதுக்கு உள்பட்ட சிறார்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

– பா. பாரதி