டோக்கியோ

ஷிங்கெரு இஷிபா ஜப்பான் நாட்டின் புதிய பிரதமாராக பதவி ஏற்றுள்ளார்.

அண்மையில் ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி ஷிங்கெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

முந்தைய ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடா பதவி விலகியதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை(27-ம் தேதி) இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தேர்வு செய்தது.

அவர் இன்று (01.10.2024) அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் அவர் முறைப்படி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இஷிபா தனது புதிய அமைச்சரவையை விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் இஷிபா அமைச்சராக  பணியாற்றி உள்ளார்.

[youtube-feed feed=1]