உலகக்கோப்பை டி20 அணியில் இருந்து ஷிம்ரோன் ஹெட்மையர் நீக்கம்!

Must read

சிட்டி: உலகக்கோப்பை டி20 அணியில் இருந்து மேற்கு இந்திய அணி வீரர் ஷிம்ரோன் ஹெட்மையர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஷிம்ரோன் ஹெட்மியர்  ‘மீண்டும் திட்டமிடப்பட்ட’ விமானத்தைத் தவறவிட்டதால் நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ்  மாற்று வீரர் பெய்ர அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இந்த மாதம் (அக்டோபர்) மாதம் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.  இந்தியா தனது தொடக்க ஆட்டத்தை அக்டோபர் 24 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இந்திய அணியை ரோஹித் ஷர்மா வழிநடத்த உள்ளார்.  இந்திய அணியில் சக்திவாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்டர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்களை தேர்வு செய்து உலக கோப்பை அணியை வெளியிட்டது.

இந்த நிலையில், டி20 மேற்கு இந்திய தீவுகள் அணியில் இருந்து, அதிரடி வீரர் ஷிம்ரோன் ஹெட்மையர், ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தை தவற விட்டதால், டி20 உலக கோப்பை அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக் காக விமான பயணத்தை ஒருநாள் ஒத்திவைக்க கோரிய அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு, அவர் நீக்கப்பட்டு உள்ளார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article