மேகாலயாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரிக்கி ஏ.ஜே. சிங்கான் ஷில்லாங்கில் நேற்று ஃபுட்சல் விளையாடும்போது மயங்கி விழுந்ததில் மரணமடைந்தார்.

சிறிய உள்ளரங்கில் ஐந்து பேர் மட்டுமே விளையாடும் கால்பந்து போட்டியான ஃபுட்சல் விளையாடும் போது நேர்ந்த இந்த மரணம் மேகாலயாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயாவின் வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள் கட்சியைச் சேர்ந்த 54 வயதான எம்.பி., நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார்.

முதலுதவிக்காக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நகரின் டாக்டர் எச். கார்டன் ராபர்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.42 மணிக்கு உயிரிழந்தார்.

ரிக்கி ஏ.ஜே. சிங்கான் மறைவுக்கு முதல்வர் கான்ராட் கே. சங்மா அதிர்ச்சியும் வேதனையையும் வெளிப்படுத்தினார்.

சிங்கானை ஒரு உறுதியான மக்கள் பிரதிநிதி என்று வர்ணித்தார்.

ஷில்லாங் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய சிங்கான், காசி-ஜெயின்தியா மலைகள் முழுவதும் தனது தீவிரமான பொது ஈடுபாடுகளுக்கு பெயர் பெற்றவர்.

அவர் 2024 தேர்தலில் தனது நெருங்கிய போட்டியாளரான காங்கிரஸ் எம்.பி. வின்சென்ட் எச். பாலாவை விட 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

[youtube-feed feed=1]