நாட்டிங்காம்:

ட்டை விரல் காயம் காரணமாக 3 வாரம் ஓய்வு அளிக்கப்பட்ட ஷிகர் தவான், புத்துணர்சி ஊட்டும்  கவிதையை தனது  டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தனது உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்து உள்ளர். இது வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா ஆஸ்திரே லியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தின்போது,  109 பந்துகளில் 16 பவுண்டரியுடன் 117 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டதுடன்,  ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

ஆட்டத்தின்போது,  ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து ஷிகர் தவானின் இடது கை பெருவிரலை பதம் பார்த்தது. வலியால் துடித்த தவானுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து ஆடி வந்தார். ஆனால், பீல்டிங்கின்போது களம் இறங்கவில்லை.

காயம் அடைந்த ஷிகர் தவானின் விரலுக்கு  ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு இடது கை பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததை தொடர்ந்து அவருக்கு 3 வாரம் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தவான் வியாழக்கிழமை நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மற்றும் 22ந்தேதி நடைபெற உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் அவர் ஆட்ட முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளத. இந்த நிலையில், டாக்டர்களின் அறிக்கையின் அடிப்படையிலேயே தவான் உலக கோப்பை போட்டியில் தொடர முடியுமா? அல்லது உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறுவாரா? என்பது முடிவாகும்.

இந்த நிலையில், ஷிகார் தவான்  தனது டிவிட்டர் சமூகவலைதளத்தில், உருது கவிஞரின் கவிதை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  புத்துணர்ச்சி ஊட்டும் உருது கவிதையை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தவான். இதன் மூலம்  தனது உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்து உள்ளர்.