கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி மெக்காவை நோக்கி தனது ஹஜ் புனித யாத்திரையை நடைபயணமாக தொடங்கினார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் துவங்கி பாகிஸ்தான், ஈரான், ஈராக், குவைத் வழியாக சவுதி அரேபியா வரை 8640 கி.மீ. தூரத்தை சுமார் 370 நாட்கள் நடந்தே வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்துள்ளார்.
சவுதி அரேபியாவுக்குள் நுழைந்தகயுடன் ஷிஹாப் சோட்டூர் முதலில் மதினாவுக்குச் சென்றார். அங்கே 21 நாட்கள் தங்கியிருந்து ஆன்மிகக் கடமைகளை முடித்துக் கொண்டு மெக்கா புறப்பட்டார் மதினாவில் இருந்து மெக்காவுக்கும் நடந்தே சென்றார்.
Video Player
00:00
00:00