பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேச பிரதமராக மொத்தம் 20 ஆண்டுகள் பதவி வகித்த ஷேக் ஹசீனா 2009 முதல் தற்போது வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் பிரதமராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் தலைமையில் போராட்டம் வெடித்தது.
இந்தப் போராட்டம் கலவரத்தில் முடிந்ததை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவையும் மீறி பிரதமரின் பங்களாவை அந்நாட்டு மக்கள் முற்றுகையிட்டதை அடுத்து ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பினார்.
https://x.com/ANI/status/1820410547021680696
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பியதை அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனாவுடன் அங்கிருந்து புறப்பட்ட விமானம் இந்திய எல்லைக்கு அருகில் பறந்த போது டெல்லி வர தகவல் அனுப்பியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.