டில்லி

மோடி, ஸ்ம்ரிதி, அருண் ஜேட்லி ஆகியோரை பாஜக வின் பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பா ஜ க பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா நேரம் கிடைக்கும் போதெல்லாம் மோடியை விமர்சித்து வருகிறார்.  சமீபத்தில் மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் பரபரப்பை உண்டாக்கியது.  நேற்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு அவர் உரையாற்றி உள்ளார்.

அவர் தனது உரையில் “நான் எப்படி பொருளாதாரம் பற்றி பேசலாம் என சிலர் கேட்கின்றனர்.  ஒரு வழக்கறிஞர் (அருண் ஜேட்லி) பொருளாதார அமைச்சராகலாம்,  ஒரு சீரியல் நடிகை ஸ்மிரிதி இராணி) மனிதவள மேம்பாட்டு அமைச்சராகலாம்,  ஒரு டீக்கடைக்காரர் (மோடி) இந்த நாட்டையே ஆளும் பிரதமராகலாம் எனும் போது நான் ஏன் பொருளாதாரம் பற்றி பேசக் கூடாது?” என கேட்டுள்ளார்.  இது போல மோடி, அருண் ஜேட்லி, ஸ்மிருதி இராணியை அவர் விமர்சித்தது மற்றொரு பரப்பரப்பை உண்டாக்கி உள்ளது.

மேலும் அவர் உரையில் பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, பசுக்காவலர்கள் செய்யும் படுகொலைகள், நாட்டில் நடைபெறும் பல கொலைகள் பற்றியும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.