ரசிங்கப்பூர், மத்தியப் பிரதேசம்

ஷ்வந்த் சின்ஹாவுடன் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்துள்ள சத்ருகன் சின்ஹா மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு பற்றி கேள்விகள் எழுப்பி உள்ளார்.

சமீபகாலமாக பாஜகவின் முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹாவும் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர்.    மத்தியப் பிரதேசத்தில் அனல்மின் நிலைய திட்டத்துக்காக பல விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது.   அதை எதிர்த்து நரசிங்கப்பூர் பகுதியில் யஷ்வந்த் சின்ஹா கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்.   அதில் கலந்துக் கொள்ள சத்ருகன் சின்ஹா  நேற்று ம. பி. வந்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹாவின் ராஷ்டிரிய மன்ச்சில் இணைந்துள்ள சத்ருகன்  இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டார்.  அவருடன் ஆம் ஆத்மி கட்சியின் மத்தியப் பிரதேச தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.   அந்தக் கட்சியின் ம. பி.  மாநில செயலாளர் அலோக் அகர்வால் யஷ்வந்த் சின்ஹாவின் இந்த போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்.

சத்ருகன் சின்ஹா அங்கு நடந்த கூட்டத்தில் உரையாற்றினார்.   அப்போது, “மத்திய நிதி அமைச்சர் அருன் ஜெட்லி தற்போது ஒரு மருத்துவக் காப்பிடு திட்டம் அறிவித்துள்ளார்.   அதற்கு பிரிமியம் மட்டும் ரூ.1,25,000 லட்சம் கோடி செலுத்த வேண்டி உள்ளது.  மாநில மற்றும் மத்திய அரசுகளின் மொத்த மருத்துவ செலவுக்கான பங்கீட்டை விட இது பல மடங்கு அதிகம்.   இதற்கு எங்கிருந்துபணம் வரும் என நான் மோடியைக் கேட்கிறேன்.” என கேள்வி எழுப்பினார்.