டில்லி

ன் மருமகள் ஒரு குஜராத்திப் பெண் என்பதால் எங்களுக்கு குஜராத்தியர்கள் மேல் அன்புதான் உள்ளது என சஷி தரூர் கூறி உள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அன்று குஜராத்தில் தேர்தலை முன்னிட்டு மாபெரும் பேரணி ஒன்று நடந்தது.  அந்தப் பேரணியில் கலந்துக் கொண்டு மோடி பேசுகையில் காங்கிரஸ் என்றுமே குஜராத் மாநிலத்துக்கு விரோதமான கட்சி எனவும் குஜராத்திகளை கண்களில் விழுந்த தூசி போல நடத்துகிறது  எனவும் விமர்சித்திருந்தார்.

மேலும் அவர், “நமது மொரார்ஜி தேசாய் அவர்கள் பிரதமரானதும் இதே கும்பல் அவர் என்ன  பருகுகிறார், என்ன பருகவில்லை என பல செய்திகளை பரப்பினர்.  அது மட்டுமின்றி சர்தார் வல்லப்பாய் படேலுக்கும் அவர் மகனுக்கும் இவர்கள் இழைத்த அநீதியை சரித்திரம் அறியும்.  இவர்களுக்கு குஜராத் என்றாலே கண்ணை உறுத்தும்” என கூறி இருந்தார்.   இந்த செய்தி மோடியின் டிவிட்டர் பக்கத்திலும் வெளியானது.   இது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஷி தரூர் பதில் அளித்துள்ளார்.  அவருடைய மகன் இஷான் சமீபத்தில் குஜராத்திப் பெண்ணான பூமிகா தேவி என்பவரை மணம் புரிந்துள்ளார்.  அதைக் குறிப்பிட்டு சஷி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”எனது மகன் ஒரு குஜராத்திப் பெண்ணை மணந்துள்ளார் நரேந்திர மோடி அவர்களே.  அதனால் எங்களுக்கு உங்கள் மாநிலத்தின் மீதும் அந்த மாநிலத்து மக்கள் மீதும் அன்பு மட்டுமே உள்ளது” எனக் கூறி உள்ளார்.