டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் அறையில் 2014 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ம் தேதி மர்மமான நிலையில் உயிரிழந்தார் சுனந்தா புஷ்கர்.

இந்த வழக்கில் அவரது கணவரான சசி தரூர் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து சசி தரூரை விடுவிப்பதாக நீதிபதி கீதாஞ்சலி கோயல் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சசி தரூர், கடந்த ஏழரை ஆண்டுகளாக தான் அனுபவித்த துன்பத்திலிருந்து விடுதலை கிடைத்திருப்பதாகவும், நீதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel