சென்னை:
மழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாகக் காய்கறிகள் விலை உயர்வைடைந்துளது.
கடந்த வாரம் தஞ்சையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து காய்கறி மொத்த வியாபாரிகள் கூறுகையில், சந்தைக்குத் தினமும் 50 டன் தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது விளைச்சல் இல்லாததால் பாதியாகக் குறைந்து 25 டன் விற்பனைக்கு வருகிறது. அதுவும் முற்றிலும் பழங்களாக இல்லாமல் காயாகவும் விற்பனைக்கு வருகிறது. 25 கிலோ கொண்ட ஒரு பெட்டியில் 10 கிலோவுக்குமேல் தக்காளி காயாகத்தான் உள்ளது. நன்றாகப் பழுத்த பழங்களும் மழையினால் சேதம் அடைந்துகாணப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.