முகல்சராய்,உத்தரப்பிரதேசம்

புலம்பெயர் தொழிலாளர் ரயிலில் செல்வோர் ரயில்வே பிளாட்பாரத்தில்  வைக்கபட்டுள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்து ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.

நாடெங்கும் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு ஷார்மிக் ரயில் என்னும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றது.

இந்த ரயிலில் பயணம் செய்வோருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதில்லை.

இதனால் பசி மற்றும் தாகத்தால் தொழிலாளர்கள் துயருற்று வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் உணவு மற்றும் குடிநீர் வழங்கக் கோரி போராட்டம் நடந்தது.

 உபி மாநிலம் முகல்சராய் ரயில் நிலையத்தில் மலை போல் குடிநீர் பாட்டில்கள் குவிக்கப்பட்டு இருந்தன.

ரயிலில் பயணம் செய்யும் தொழிலாளர் பாய்ந்து வந்து அள்ளிச் செல்லும் காட்சி வீடியோ ஆக்கபட்டு வைரலாகி உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=Fo0YIrJKrH0]