டில்லி:
நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது நகராட்சி பகுதிகளுக்கு நீட்டிக்கப்படமாட்டாது என்று உச்சநீதிமன்றம் நேற்று தெளிவுபடுத்தியது. இதை தொடர்ந்து மதுபான நிறுவன பங்குகளில் விலை உயர்வை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இந்த நிறுவனங்களில் பங்குகள் 12 சதவீதம் வரையிலான உயர்வை சந்தித்தன. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் 3.89 சதவீதம் உயர்ந்து ரூ.2,566.65 ஆக இருந்தது. இன்ட்ரா டே பரிவர்த்தணையில் 5.51 சதவீதம் அதிகரித்து ரூ. 2,607.90 வரை வர்த்தகமானது.
ஜி.எம் பரிவரீஸ் நிறுவன பங்குகள் 5.03 சதவீதம் அதிகரித்து ரூ. 421.75 என்ற நிலையுடன் முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது அதிகபட்சம் ரூ.444 வரையிலும், குறைந்தபட்சம் ரூ.412.35 என்ற நிலையிலும் இருந்தது. குளோபஸ் ஸ்பிரிட்ஸ் நிறுவன பங்குகள் 12.10 சதவீதம் என்ற அதிகபட்ச ஆதாயத்தை அடைந்தது. ரூ.72.72க்கு பங்குகள் விற்பனையாயின.
பின்கான் ஸ்பிரிட் நிறுவன பங்குகள் 9.99 சதவீதம் அதிகரித்து ரூ.47.90 என்ற நிலையில் இருந்தது. எம்பீஸ் டிஸ்டில்லரிஸ் பங்குகள் 3.68 சதவீதமும், சாம் டிஸ்டில்லரிஸ் மற்றும் ப்ரிவரீஸ் 3.39 சதவீதமும், பயனியர் டிஸ்டில்லரிஸ் 2.68 சதவீதமும், வில்சம் பிரீவரிஸ் 2.44 சதவீதமும், கோதே இந்தியா 2.24 சதவீதமும், திலக்நகர் இண்ட்ஸ்ட்ரீஸ் 1.93 சதவீதமும், ரேடிகோ கெய்தான் 1.85 சதவீதமும் உயர்ந்தன.