டில்லி:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்து உள்ளார். தனது குடும்பத்தை சேர்ந்த 2 பேர் தேர்தலில் களமிறங்குவதால், தான் போட்டியிட வில்லை என்று தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி, 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசியவாத காங்கி ரஸ் சார்பில், சரத்பவாரின் பேரன் பார்த்தி பவான் மாவல் தொகுதியில் களமிறங்க உள்ளார்.

முன்னாள் மகாராஷ்டிர மாநில முதல்வரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை,  வேளாண்துறை அமைச்சராக பணியாற்றியவருமான  சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை நடத்தி வருகிறார். தற்போது  ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார். இவர் ஏற்கனவே 14 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இவர் சமீபத்தில் லோக்சபா தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ஔரங்காபாத் மற்றும் நாகர் தொகுதிகளுக்கு உள்ளிட்ட தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

‘அப்போது பேசிய சரத்பவார், “என் குடும்பத்தை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் இந்த நேரத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். எனவே நான் தேர்தலில் போட்யிட வேண்டுமா என்பது குறித்து சிந்தித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக சரத்பவார் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சரத் பவாரின் மகள், சுப்ரியா சுலே ஏற்கனவே அரசியலில் உள்ள நிலையில், தற்போது சரத்பவாரின் பேரனும் அரசியலில் நுழைய உள்ளார்.  பார்த்தி பவான் மாவல் தொகுதியில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.