
மும்பை: கூட்டணி ஆட்சியில், பாரதீய ஜனதாவிடம் சிவசேனாக் கட்சி சமப்பங்கு கேட்பதில் தவறில்லை என்று கூறியதன் மூலம், கூட்டணி குட்டையில் தனது பங்கிற்கும் ஒரு கல்லை எறிந்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் கடசித் தலைவர் சரத்பவார்.
மராட்டிய சட்டசபைத் தேர்தலில், பாஜ – சிவசேனா கூட்டணி வென்றிருந்தாலும், ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சியில் சமபங்கையும், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யாவுக்கு துணை முதல்வர் பதவியையும் கேட்கிறது சிவசேனா.
ஆனால், 105 இடங்கள் வரை வென்ற பாரதீய ஜனதா, வெறும் 56 இடங்களை மட்டுமே வென்ற சிவசேனாவிற்கு சமபங்கை தருவதற்கு தயாரில்லை. ஆனால், சிவசேனா முரண்டு பிடிப்பதால் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரசுடன் இணைந்து சிவசேனை ஆட்சியமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. இந்நிலையில், சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கப் போவதில்லை என்று ஏற்கனவே தெரிவித்த சரத்பவார், பாரதீய ஜனதாவிடம் ஆட்சியில் சமபங்கை சிவசேனா கேட்பதில் தவறில்லை என்று கூறி, தனது பங்கிற்கு கொளுத்திப் போட்டுள்ளார்.
இதன்மூலம், மராட்டிய எதிர்க்கட்சிகள் பாரதீய ஜனதாக் கூட்டணியில் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கின்றன என்ற காவி கட்சியின் குற்றச்சாட்டிற்கு இன்னும் வலு சேர்ந்துள்ளது.
[youtube-feed feed=1]