2019-ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான துப்பறியும் த்ரில்லர் படம் ‘பீர்பால்’. பீர்பால் ட்ரீலஜி கேஸ் 1: ஃபைண்டிங் வஜ்ரமுனி’ என்கிற பெயரில் வெளியானது.

நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், ஓடிடி தளத்தில் வெளியானதும் மொழிகள் தாண்டிய ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

‘திம்மரசு’ என்கிற பெயரில் தெலுங்கில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடியால் இதன் வெளியீடு தள்ளிப்போடப்பட்டது.

தற்போது தமிழில் இந்தப் படம் ரீமேக் ஆகிறது. சாந்தனு கதாநாயகனாக நடிக்க, பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள் தாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ‘மதியாளன்’ என்று தமிழில் பெயரிடப்பட்டுள்ளது. கண்ணன் ரவி தயாரிக்கிறார்.