சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து 2 முறை தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் நீடித்து வந்தார். இவரது   பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து , அவர்  பதவியை விட்டு விலக விரும்புவதானக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து,  விழுப்புரத்தில்  நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் புதிய மாநில செயலாளரை தேர்வு செய்யும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்கட்சியின் புதிய மாநில செயலாளர் பொறுப்பிற்கு பெ.சண்முகம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சமீப காலமாக திமுக அரசின்  மக்கள் விரோத நடவடிக்கைகளை  கடுமையாக விமர்சித்து வந்தார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மற்றும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டங்களில் அவரது விமர்சனம் ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை கொடுத்து வந்தது. இந்த நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற  மாநிலசெயற்குழு கூட்டத்திலும் திமுகவை நேரடியாக விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டில், அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருப்பதாக அவர் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  இவர் தற்போது அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார். தமிழக மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக பதவி வகித்தவர் ஆவார்.

விழுப்புரத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் இறுதி நாளான இன்று, மாநாட்டு கூட்டம் நிறைவடைந்ததும், புதிய மாநில செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூடத்தில் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.