மும்பை,

ங்கிலேயர் இந்தியாவை விட்டு 70 ஆண்டுகளுக்கு முன் சென்றதாக கூறப்பட்டாலும், இன்னும் அவர்களது அதிகாரம் இங்கே  இருப்பதற்கான சான்று வெளியாகியுள்ளது.    

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு1951 ம் ஆண்டு ரயில்வே தேசியமயமாக்கப்பட்டது. ஆனால் மஹாராஷ்ட்ரா  மாநிலத்திலிருக்கும் சாகுந்தலா ரயில் மட்டும் தனியார்வசம் உள்ளது. குறுகிய ரயில்பாதையில் ஓடும் ரயில்  1910 ம் ஆண்டு பிலிப்-நிக்சன் என்ற ஆங்கிலேய நிறுவனத்தால் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. ரயிலுக்கு அப்போது விதர்பா பகுதியை ஆண்டுவந்த ராணி சகுந்தலாவின் பெயர் சூட்டப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ரயில் தொடக்கத்தில் நீராவி இயந்திரத்தில் ஓடியது.

 

தற்போதும் டீசல் என்ஜின் மூலம் ஓடிக்கொண்டிருக்கிறது. யாவட்மால் என்ற இடத்திலிருந்து பருத்தியை ஏற்றிக்கொண்டு மும்பை துறைமுகத்துக்கு கொண்டுவர மட்டுமே ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த ரயில் தற்போது அமராவதி மாவட்டத்தில் எளிய மக்களின் உன்னத வாகனமாக விளங்கிவருகிறது. தினமும் 190 கிலோ  மீட்டர்  பயணத்தை 25 ரூபாய்க்குள் முடித்துவிடுகிறார்கள் அமராவதி பகுதி மக்கள்.

இந்த ரயில் பயன்பாட்டில் இருப்பதால் பிலிப்-நிக்சன் என்ற ஆங்கிலேய நிறுவனம் இந்திய ரயில்வேயிடமிருந்து ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வசூலித்துவருவது குறிப்பிடத்தக்கது.