இஸ்லமாபாத்:

பாகிஸ்தான் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரிதியின் வயது சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்துள்ளது.


இந்நிலையில், தனது சுயசரிதை நூலில் உண்மையான பிறந்த ஆண்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அஃப்ரிதி.

கேம் சேஞ்சர் என்ற சுயசரிதை நூலில், பாகிஸ்தான் சீனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டது 1996-ம் ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

\
அதில் தான் 1975-ம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், தேதி மற்றும் மாதத்தை அவர் குறிப்பிடவில்லை.

கிரிக்கெட்டில் காலடி பதித்தபோது குறிப்பிட்ட வயதைவிட 5 ஆண்டுகள் மூத்தவராக இருந்துள்ளார் அஃப்ரிதி.

ஈஎஸ்பிஎன் கிரிக்கெட் இன்ஃபோ இணையதளத்தில் வீரர்கள் சுயவிவரம் குறித்த தகவலில் ஷாகித் அஃப்ரிதி பிறந்த ஆண்டு 1980 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அவர் பிறந்த தினம் 1980- ம் ஆண்டு மார்ச் 1 என உள்ளது.
ஆனால், சுயசரிதையில் 1975-ம் ஆண்டு பிறந்ததாக கூறுகிறார்.

நைரோபியில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தார் அஃப்ரிதி.

16 வயதில் சாதனை படைத்ததாக கூறப்பட்டது. ஆனால், அப்போது அவருக்கு 16 வயதல்ல, 21 வயது என தற்போது தெரியவந்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு முன்பு, பாகிஸ்தான் அண்டர்-19 அணியில் அஃப்ரிதி விளையாடிக் கொண்டிருந்தார்.

அவர் தற்போது வெளியிட்டுள்ள உண்மையான வயதைப் பார்க்கும்போது, பாகிஸ்தான் அண்டர்-19 அணியில் அவர் இடம் பெற்றிருக்கக் கூடாது.