பெஷாவர்:
பாகிஸ்தானில் மசூதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெஷாவர் நகரில் போலீஸ் குடியிருப்பில் உள்ள மசூதியில் மதியம் தொழுகை முடிந்ததும், பலத்த சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.

இந்த பயங்கர தாக்குதலில் 47 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

நாட்டை பாதுகாப்பவர்களை குறிவைத்து, பயத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.