
ஸ்பானிஷ் மொழியில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘மனி ஹைஸ்ட்’ என்கிற பிரபல வெப் சீரிஸை பாலிவுட் திரைப்படமாக்குகிறார் நடிகர் ஷாரூக் கான்.
‘ஜீரோ’ படத்தின் தோல்விக்குப் பிறகு இந்தத் தொடரின் உரிமையை ஷாரூக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை தயாரிப்பதோடு, ‘தி ஃப்ரொஃபஸர்’ கதாபாத்திரத்தில் ஷாரூக் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘தி ஃப்ரொஃபஸர்’ என்கிற கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடக்கும் கதை ‘மனி ஹைஸ்ட்’.
Patrikai.com official YouTube Channel