கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் நடிகர் ஷாரூக் கான், தான் நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் பல்வேறு வகைகளில் நிவாரண உதவி அளிக்க முன்வந்துள்ளார்.

மும்பை, கொல்கத்தா, புது டெல்லி ஆகிய நகரங்களில் முதல் கட்டமாக உதவ முடிவெடுத்திருக்கும் ஷாரூக் கான், தான் அளிக்கவுள்ள உதவிகள் குறித்து விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

1. பி.எம் கேர்ஸ் நிதி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணி மூலம் இதற்கு நிதி தரப்படும்.

2. மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதி : ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் இதற்கு நிதி தரப்படும்.

3. சுகாதாரத் துறையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள்: கேகேஆர் மற்றும் மீர் அறக்கட்டளை சேர்ந்து, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர அரசுடன் இணைந்து, 50,000 பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிக்கும்.

4. ஏக் சாத் – தி எர்த் ஃபவுண்டேஷன்: மீர் அறக்கட்டளையும், ஏக் சாத்தும் இணைந்து மும்பையில் குறைந்தது ஒரு மாதத்துக்கு 5,500 குடும்பங்களுக்குத் தினசரி உணவு அளிக்கும்.

5. ரோடி ஃபவுண்டேஷன்: மீர் அறக்கட்டளை, ரோடி அறக்கட்டளையோடு சேர்ந்து குறைந்தது ஒரு மாதத்துக்கு, தினமும் 10,000 பேருக்கு 3 லட்சம் உணவுப் பொட்டலங்களைத் தரும்.

6. வொர்க்கிங் பீபில்ஸ் சார்டர் அமைப்புடன் சேர்ந்து மீர் அறக்கட்டளை, குறைந்தது ஒரு மாதத்துக்கு, டெல்லி முழுவதும் உள்ள, அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 2500 தினக்கூலிப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களைத் தரும்.

7. ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு: மீர் அறக்கட்டளை, ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பார்த்துக் கொள்ள மாதாந்திர உதவித்தொகை தரும். இதற்காக உத்தரப் பிரதேசம், டெல்லி, பிஹார், மேற்கு வங்கம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.