கொல்கத்தா:
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீண்டும் தற்போது இன்டர்நெட்டில் வைரலாகிவிட்டார். இந்த முறை மேற் குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு உதவியுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த திரைப்பட விழாவில் கலந்துகொள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சென்றிருந்தார். விழா முடிந்த பின்னர் அவரை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது சொந்த காரில் அழைத்து வந்து விமானநிலையத்தில் வழியனுப்பி வைத்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.
மம்தா எப்போதும் காரின் முன் இருக்கையில் டிரைவருக்கு அருகே அமர்ந்து பயணம் செய்வதை வழ க்கமாக கொண்டிருப்பார். அதேபோல் தற்போதும் தனது ஹூண்டாய் சான்ட்ரோ காரில் முன் இருக்கையில் அமர்ந்து விமானநிலையம் வந்தார். விமானநிலையம் வந்தவுடன் காரில் இருந்து இறங்கிய மம்தா பின் கதவை திறந்துவிடுகிறார்.
அதில் இருந்து நடிகர் ஷாருக்கான் இறங்குகிறார். காரை விட்டு வெளியே வந்த ஷாருக்கான் மம்தா காலில் விழுந்து ஆசி பெறுகிறார். பின்னர் இருவரும் விமானநிலையம் உள்ளே செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. 1998ம் ஆண்டு முதல் ஹூண்டாய் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஷாரு க்கான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
[embedyt] https://www.youtube.com/watch?v=BI–Fqq_4fk[/embedyt]