சென்னை: சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் வரும் 30ந்தேதி வரை மேலும் 15 நாட்கள் நீட்டித்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி தாலாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சார்பில் பாலியல் புகார்கள் கூறப்பட்டன. இதுதொடர்பாக அவர் மீது போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 2 வழக்குகளில் அவருக்கு ஜாமின் கிடைத்துள்ள நிலையில், மற்ற 4 வழக்குகளில் அவர் சிறையில் மற்ற வழக்குகளில் அவரது சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிவசங்கர்பாபாவை  இன்று மீண்டும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் சென்னை சிபிஐடி போலீசார்  ஆஜர்படுத்தினர். விசாரணையின்போது, சிவங்கர் பாபா தரப்பில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க கோரி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நெஞ்சுவலி, நீரழிவு, கண்பார்வைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொடர் சிகிச்சையால் மட்டுமே தனது வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்பதால் தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கு சிபிசிஐடி, புழல் சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்து.

இதையடுத்து, மகிளா நீதிமன்ற நீதிபதி ரீனா, சிவசங்கர் பாபாவிற்கு மேலும் 15நாட்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து மீண்டும் வருகிற 30.11.2021 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.