திருச்சி: அரசு உதவிபெறும் தனியார் தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பிட்ட தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக அந்த மருத்துவரின் தாயே பணியாற்றி வரும் நிலையில்,  அவரது மகனான அரசு மருத்துவர் சாம்சன் என்பவர் அந்த பள்ளி விடுதிக்கு அடிக்கடி வந்து பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு  தலைமை ஆசிரியையாயன அவரது தாயும் உடந்தையா இருப்பார்  என பெற்றோர்கள்  குற்றம் சாட்டி  வருகின்றனர்.

திருச்சி மாநகர பகுதியில் கிறிஸ்த  தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியை மகன், சாம்சன் (31), லால்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.

இவர், தனது தாய் வேலைபார்த்து வரும் பள்ளியில் செயல்பட்டு வரும்  சிறுமிகள் தங்கி இருக்கும் விடுதிக்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் அங்குள்ள மாணவிகளிடம் மருத்துவம்  பார்ப்பது போல கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சில குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு புகார் அளித்துள்ளனர். அதன்  அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரும், மற்ற அதிகாரிகளும் விடுதிக்கு   சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமிகளுக்கு மருத்துவர் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது.

இந்த சம்பவம் தொடர்பாக,, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தலைமையாசிரியர் மற்றும் அவரது மகன் மருத்துவர் சாம்சன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  மருத்துவர் சாம்சன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை மூன்று நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

2017ல் புதுச்சேரியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த சாம்சன், 2021ல் அரசுப் பணியைத் தொடங்கினார். திருச்சிக்கு மாற்றப்படுவதற்கு முன்பு தூத்துக்குடியில் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.  தங்கியிருந்தாக, போலீஸ் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.