மயிலாடுதுறை: சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோழிகுத்தி கிராமத்தில் வசித்து வருபவர் மகாலிங்கம். 60வயதான இவர், தெற்கு ஒன்றிய பாஜக செயலாளராக இருந்து வருகிறர்.
இவர் அந்த பகுதிகளைச் சேர்ந்த 4 சிறுமிகளிடம்,போன் மூலம் ஆபாச படங்களை காண்பித்து, சில்மிசத்தில் ஈடுபட வற்புறுத்திய கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமிகல், பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் பெற்றோர்கள், மகாலிங்கம் மீது, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் மகாலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளின் பாலியல் இச்சையை தூண்டி விடுதல்வஉள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.