சென்னை: அரக்கோணம் திமுக நிர்வாகி தெய்வசெயல் மீதான பாலியல் விவகாரத்தில் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஆளுநர் மாளிகையில் மனு அளிக்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், அரக்கோணம் காவனூரைச் சேர்ந்த தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த தெய்வச்செயல் ஏற்கனவே திருமணமானதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் தன்னை  அரசியல் கட்சி முக்கிய பிரமுகரின் பாலியல் இச்சைக்கு தன்னை இணங்க வற்புறுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் கூறி தற்கொலைக்கு முயன்றார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அதிமுக பிரமுகர்களிடம் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்தே, தெய்வசெயலை கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியதுடன்,  இதுபற்றி மாணவியின் பெற்றோர், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அரக்கோணம் மகளிர் போலீசார் தெய்வச்செயல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், திமுக நிர்வாகி தெய்வச்செயல், பாலியல் குற்றச்சாட்டில் தான் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி  முன்ஜாமீனும் பெற்றுள்ளார்.  இதுவும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி, தனது வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை. தான் காவல்துறையிடம் கொடுத்த ஆவனங்கள், குற்றவாளியிடமே சென்றுள்ளது. அதனால், தனதுக்கு காவல்துறை விசாரணையில் நீதிப கிடைக்காது என்று குற்றம் சாட்டி உள்ளதுடன்,  தனக்கு நீதி வேண்டும். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக, சென்னையில் உள்ள கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்த கோரிக்கை மனு கொடுப்பதற்காக நேற்று கிண்டி கவர்னர் மாளிகைக்கு தனது தாயாருடன் வந்தார். ஆனால் கவர்னர் சென்னையில் இல்லை. ஆன்லைன் மூலம் புகார் கொடுங்கள் என கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தெரிவித்தனர்.

இதை கண்ட அங்கு காவலுக்கு நின்ற காவல்துறையினர் உஷார் அடைந்து, பெண் காவலர்மூலம் அந்த மாணவியை அங்கிருந்து அழைத்துச் சென்று  உங்களை புகாரை கிண்டி ஆர்.டி.ஓ.விடம் புகார் கொடுக்கும்படி கூறி  ஆட்டோவில் ஏற்றி சென்றனர். ஆனால், அவர்கள் கூறியபடி  கிண்டி ஆர்.டி.ஓ. வை சந்திக்காமல் அங்கிருந்து கோயம்பேடு நோக்கி மாணவியை அழைத்து சென்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த மாணவியும், அவரது தாயாரும் பெண் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்கள் வந்த ஆட்டோ,  ஈக்காட்டுத்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அந்த மாணவி, தனது தாயாருடன் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.