நாகர்கோவில்: சர்ச்சுக்கு வரும் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து விவகாரத்தில், பாதிரியார் பெடிக்ட் ஆன்டோ மீதுமேலும் 4 பெண்கள் புகார் கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த் பெனடிக்ட் ஆன்றோ இளம்வயது பாதிரியார், தான் பணியாற்றி வரும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோக்கள், வாட்ஸ்அப் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, நர்ஸ் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, தலைமறைவாக இருந்த பாதிரியாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப்பை ஆய்வு செய்தபோது, அதில், 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் பாலியல் சேட்டை செய்தது தொடர்பான வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது.  ஆபாச சாட்டிங், இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் என சமூக வலைத்தளங்களில் பரவி முகம் சுளிக்கும் வகையில் வீடியோக்கள் இருந்தன.

இதுமட்டுமின்றி பாதிரியார்  தேவாலயப் பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ள இந்த பாதிரியார், அங்கும் தேவாலயங்களுக்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக  பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கலாம் என்றும் காவல்துறையினர் அறிவித்திருந்தனர். பெனடிக்ட் ஆன்றோவால் மிரட்டப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம், அவர்களுடைய பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.