சென்னை: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – கொலைகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கும்பலால் மிரட்டி  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில்  பெண்களுக்கு எதிரான  பாலியல் வன்கொடுமை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல, அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்தால் தினசரி பல பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் தகவல்களும் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்2 மாணவிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கல்லூரி மாணவி  ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் திமுக பிரமுகரால் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வேறொரு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து,.கல்லூரி மாணவி அபிராமபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில்,  திருச்சியில் இருந்து சென்னைக்கு பிராஜக்ட் செய்ய வந்திருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடையாறு பகுதியில் செயல்பட்டு வரும் மத்தியஅரசு நிறுவனமான  C.L.R.I.க்கு பிராஜக்ட் செய்வதற்காக வந்த மாணவியின் செல்போனுக்கு மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களை அனுப்பி ஒரு கும்பல் மிரட்டி உள்ளது.

மாணவியை C.L.R.I.க்கு வெளியே வரவழைத்து காரில் வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று அந்த கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த கும்பல் மாணவியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து மீண்டும் காரிலேயே வந்து விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆண் நண்பரிடம் நடந்ததைக் கூறி அழுத கல்லூரி மாணவி அபிராமபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமை புகார் குறித்து அபிராமபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி புகாரின் உண்மைத்தன்மை குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுக்க கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, சட்டம் ஒழுங்கு விவகாரம் கட்டுப்பாட்டை மீறியுள்ளதையே காட்டுகிறது.

[youtube-feed feed=1]