நாக்பூர்:
தான் வளர்த்து வந்த பெண் குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 72 வயதான முன்னாள் விஞ்ஞானி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாக்பூர், வார்தா ரோட்டில் உள்ள அஜ்னி சதுக்கத்தை சேர்ந்த முன்னாள் விஞ்ஞானி மசூத் அன்சாரி. நாக்பூரில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 71 வயதாகும் அன்சாரி ஏற்கனவே இரண்டு திருமணம் செய்தவர். ஆனால் இவருக்கு குழந்தைகள் கிடையாது.
இதையடுத்து 3 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். முதல் பெண்ணுக்கு 16 வயதும், இரண்டாவது பெண்ணுக்கு 11 வயதும், மூன்றாவதாக உள்ள சிறுமிக்கு 6 வயதும் நடைபெறுகிறது. மூன்று பெண்களையும் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார்.
அன்சாரி இந்த பெண்களிடம் அடிக்கடி தவறாக நடந்து வந்ததாகவும், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது. தற்போது 16 வயதாகும் அந்த சிறுமி 1-ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே அந்த 71 வயது காமுகனால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளார்.
தற்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வறுபுறுத்தி வருவதால் நடந்த சம்பவத்தை தன்னுடன் பள்ளியில் படிக்கும் தோழி ஒருவரிடம் கூறி கதறி அழுதுள்ளார். . பின்னர் அவர்கள் உதவியுடன் தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
தொண்டு நிறுவனத்தினர் அன்சாரியின் பாலியல் வன்புணர்ச்சி குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அன்சாரியை கைது செய்து, அவர் வளர்த்து வந்த 3 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ஆனால் இந்த புகாரை மசூத் அன்சாரி மறுத்துள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கவே அவர்களை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக விசாரணையின்போது அன்சாரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வீட்டை சோதனையிட்டபோது அங்கு குழந்தைகள் தத்து எடுத்ததற்கான எந்தவித ஆவனமும் கிடைக்கவில்லை என்றார் உதவிகமிஷனர் தீபாளி மசிர்கார்.