மெக்சிகோ:

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கை தனக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கை ராண்டி ஜுக்கர்பெர்க். இவர் மெக்சிகோவில் இருந்து மஜத்லன் நகருக்கு அலாஸ்கா ஏர் விமானத்தில் சென்றுள்ளார். விமானத்தில் அவரது பக்கத்து இருக்கையில் இருந்த பயணி ஒருவர் அவரிடம் வெளிபடையான பாலியல் உரையாடல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த மற்ற பெண் பயணிகள் குறித்தும் அவர் கமெண்ட் அடித்துள்ளார்.

இது குறித்து ராண்டி விமான ஊழியர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்ர். அதற்கு அந்த ஊழியர் இந்த பையன் அடிக்கடி விமானத்தில் சென்று வருபவன். அவன் சொல்வதை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ராண்டி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘அலாக்ஸா விமான நிறுவனத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாகவும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தபட்டதாகவும் தற்காலிகமாக அந்த பயணி பயணிக்க தடை விதித்துள்ளதாக கூறினர்’’ என்று தெரிவித்துள்ளார்.