பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது ’’செக்ஸ்’ புகார்..

Must read

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது ’’செக்ஸ்’ புகார்..

அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட சிந்தியா ரிச்சி, வலைத்தள பதிவர் ஆவார். உலகம் முழுவதும் சுற்றி வந்து பயணக்கட்டுரை தீட்டும் எழுத்தாளர்.

பாகிஸ்தான் நாட்டு அரசியல் வாதிகள் மீது சிந்தியா அடுக்கடுக்காக ‘செக்ஸ்’ புகார்களை அடுக்கி வருகிறார்.

‘’ 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் , என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்’’ என்று தனது முகநூல் பக்கத்தில் சிந்தியா குண்டு வெடித்திருந்தார்.

அங்குள்ள மேலும் சில தலைவர்கள் மீதும் சிந்தியா பாலியல் புகார் வாசித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், இப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெயரும் அடிபடுவது, பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிந்தியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் அலி சலீம் என்பவர், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர். அவர்தான், இந்த அதிர்வுகளுக்குக் காரணம்.

‘’ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் , என்னுடன் ’’செக்ஸ்’’ உறவு வைத்துக்கொள்ள விரும்பினார்’’ என்று சிந்தியா என்னிடம் தெரிவித்தார்’’ என அலி சலீம் அணுகுண்டு வெடிக்கச் செய்துள்ளார்.

’’நானும், சிந்தியாவும் ஒரு காலத்தில் நெருக்கமாக’ இருந்தோம். ஒரே அறையில் கூட தங்கி இருக்கிறோம். சிந்தியா என்னை நம்பிக்கையான நபராக கருதினார்’’ என்று கூறியுள்ள சலீம்,’’ இம்ரான்கான் குறித்து  சிந்தியா என்னிடம் சொன்னது உண்மை’’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இந்த செக்ஸ் புகார், புயலை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article