சேலம் : சேலம் அடுத்த வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தில், குடிநீரில்  கழிவுநீர் கலந்துள்ளது தெரியாமல், அதை பருகிய அந்த கிராமப் பகுதியைச் சேர்ந்த  50க்கும் மேற்பட்டோர்  உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கூண்டோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகள், இங்குள்ள மக்களுக்கு அனுப்பப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்துகொள்ளது. இது தெரியாமல்,  அந்த பகுதி மக்கள் குடிநீர் குழாய்களில் வந்த தண்ணீரை பிடித்து அருந்தி வந்துள்ளனர். இதனால் பலர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிதிக்கப்பட்ட நிலையில், சுமார்   50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக  அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக விரைந்து  வந்த அதிகாரிகள், இதுகுறித்து ஆய்வு செய்ததுடன், குடிநீரல் கழிவு நீர் கலந்துள்ளதை கண்டு பிடித்தனர். இதையடுத்து, உடனே குடிநீர் விநியோகத்தை நிறுத்தி, மக்கள் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினர்.

விசாரணையில்,  குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.