ட்டி

பிரபல கோடை வாசஸ்தலமான ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடும் வெப்பம் காணப்படுகிறது.

கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் அதிக அளவில் இருந்து வருகிறது. கோடைக் காலத்தில் ஓரளவுக்கு வெப்பம் குறைந்து காணப்படக்கூடிய நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது ஊட்டியில் நேற்று 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெயில் பதிவானது. அதன்படி வெப்பம் இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது.  ஏற்கனவே இதற்கு முன்பு 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் தான் பதிவாகி இருந்தது.

அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ‘ஊட்டிக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளில் என்னாகும்?’ என நினைக்கத்தோன்றும் வகையில் ஊட்டியில் இதுவரை இல்லாத அளவில் வெப்பம் கடுமையாகி உள்ளது.