டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று நடத்திய 7ம் கட்ட பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில விவசாயிகள்,  ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசு 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனாலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. குறைந்த பட்ச ஆதார விலை குறித்து மத்திய அரசின்  தரப்பில் பல்வேறு ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் எந்த முன்னேற்றமும், சுமூக தீர்வும் எட்டப்படவில்லை.  இதையடுத்து மீ்ண்டும் வரும் 8ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இதனிடையே, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் உறுதியாக இருந்ததாக தெரிகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்றும் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.